தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகளை படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்! - pictures of elephants

கோவை: ஆணைகட்டி கங்கா சேம்பர் பகுதியில் சுற்றித் திரியும் யானை கூட்டங்களை பின்தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

யானைக்கூட்டம்

By

Published : May 2, 2019, 7:14 PM IST


கோவை மாவட்ட வனப்பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால், அந்த பகுதியில் உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீரைத் தேடி படையெடுக்கின்றன.

குறிப்பாக மாங்கரை, ஆணைகட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் யானைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதை அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் யானைகளுக்கு அருகில் சென்று செல்ஃபோன் மூலம் படமெடுக்கின்றனர்.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், யானை கூட்டங்களுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details