தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுவரில் ஈட்டிகளை பொருத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை: வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுவரில் ஈட்டிகளை பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறைக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kovai
kovai

By

Published : Jan 3, 2020, 12:25 PM IST

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, எருமை, மான்கள் உள்ளிட்ட பலவகை வன உயிரினங்கள் உள்ளன. அவ்விலங்குகள் நீர் அருந்துவதற்காக பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதிக்கு மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலையை கடந்து செல்வது வழக்கம். அவற்றில் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அருகில் இருக்கும் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால், சம்பரவள்ளி பிரிவு நீர் உந்து நிலையம் அருகிலுள்ள தனியார் காலி நில சுற்றுச் சுவற்றில் ஈட்டி கம்பிகளை பதித்துள்ளனர்.

இச்சுவர் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என விலங்கு நல ஆர்வலர்கள் அதனை அகற்ற வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே, விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையால் வேடர் காலனி பகுதியில் தனியார் சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்ட ஈட்டிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுமுகை வனச்சரகம் அருகே

இதையும் படிங்க: சாலை ஓரத்தில் அடிபட்டுக் கிடந்த புள்ளிமான்!

ABOUT THE AUTHOR

...view details