கோவை : உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி புண்ணியவதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமானார். 4-வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்து வந்த புண்ணியவதி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து
தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது.
தொப்புள்கொடி சரியாக அறுபடாததாலும், முறையாக பிரசவம் பார்க்காததாலும் குழந்தையும், தாயும் மயங்கினர். 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஜயகுமார் கொண்டு சென்ற நிலையில்,
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.