கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் - ஆழியாறு அணையிலிருந்து பழைய ஐந்து வாய்க்கால்களில் 6400 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நீரை பயன்படுத்தி ஆனைமலை ஒன்றியத்தில் 2 போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டார். அதையடுத்து இன்று (ஜூன் 7) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து 146 நாட்களுக்கு 1156 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க அரசு ஆணை வழங்கியது. இதனால் ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, ”சென்ற ஆண்டு 248 கோடி கால்வாய்கள் புனரமைக்க செலவிடப்பட்டதாகவும் இந்தாண்டு காண்டூர் கால்வாயை புனரமைக்க 72 கோடியும், பரம்பிக்குளம் மெயின் வாய்க்காலை புனரமைக்க 100 கோடியும் செலவிடப்பட்டது.