கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய பணியாளர் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆயிரத்து524 ஊராட்சி பணியாளர்களுக்கு கருவூலம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேலம், ஏற்காடு ஊராட்சிகள் ஆரம்பத்தில கலைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.
அனைத்து திட்டங்கள் நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த தீர்மானம் - Resolution to hold local elections
கோவை: மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைவதற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழுவினர் பேட்டி
அதேபோல் கலைக்கப்பட்ட வால்பாறை ஊராட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்க்கப்பட வேண்டும், மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய சங்க மாநில செயற்குழுவினர் பேட்டி