தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2020, 10:42 PM IST

Updated : Sep 13, 2020, 10:22 AM IST

ETV Bharat / state

மயக்க ஊசி செலுத்தி, காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு!

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி வரும் ஆண் யானையின் உடலில் காயங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை பிடித்து வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டு சென்று அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மயக்க ஊசி செலுத்தி, காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு!
மயக்க ஊசி செலுத்தி, காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உடம்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சுற்றி வரும் ஆண் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை தலைமை வன பாதுகாவலர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல் காயம்பட்ட யானையை வனத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

நெல்லித்துறை காப்பு காட்டுக்குள் இருக்கும் ஆண் யானையை சமதளமான பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ் குமார் தலைமையில் மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் தலைமையில் இந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுகையில், "காயம்பட்ட நிலையில் சுற்றிவரும் ஆண் யானையை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க உயர் அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. நேற்று முதல் அந்த யானையை தனிக்குழு அமைத்து கண்காணித்துவருகிறோம். உரிய நேரத்தில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை மருத்துவர் சுகுமார் கூறுவது என்ன?

இதனை சமதள பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி காயத்திற்கு சிகிச்சை அளிக்க உள்ளோம். இந்த காயம் எப்படி ஏற்பட்டது என்பது சிகிச்சை அளிக்கும் போது தான் தெரிய வரும் யானையின் உடலில் காயங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை பிடித்து வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டு சென்று அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இரவு பகலாக அந்த யானையை தனி குழுவினர் கண்காணித்து வருகிறது." எனத் தெரிவித்தார்.

Last Updated : Sep 13, 2020, 10:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details