கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சீமாட்சி( திருநங்கை). இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். சிங்கப்பூரில் இருந்தபோது தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணுறுப்பாக மாற்றிகொண்டார். அவர் அங்கு பணியாற்றும்பொழுது மாதந்தோறும் 65 ஆயிரம் ரூபாய் தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார். விடுமுறைக்காக சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த சீமாட்சிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.
திருநங்கையாக மாறியது பாவமா? -கதறி அழும் திருநங்கை! - death threats converting women
கோவை: ஆணாக இருந்து பெண்ணாக மாறிய சீமாட்சி என்பவரை அவரது பெற்றோர்கள் அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆணாக சென்று பெண்ணாக திரும்பியதால் அவரது குடும்பத்தினர் சீமாட்சியை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் மன வேதனையடைந்த திருநங்கை சீமாட்சி அவரது வீட்டிற்கு சென்று சொத்தில் பங்கு கேட்டுள்ளார். சொத்தில் பங்கு தர மறுத்த அவரது குடும்பத்தினர் கடும் சொற்களால் சீமாட்சியை திட்டியதாகத் தெரிகிறது. இதனையடுத்து சீமாட்சி தனது குடும்பத்தினர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சீமாட்சியின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சீமாட்சியின் பெற்றோர் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. சீமாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் கோபமடைந்த அவரது பெற்றோர்கள் சீமாட்சியை சாலையில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். திருநங்கையாக மாறியதால் தன்னை பெற்றோர் ஏற்காததால், தான் சம்பாதித்த பணத்தை பெற்றோர்களிடம் இருந்து பெற்று தரும்படி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளார்.