கோவை அரசு மருத்துவமனை எதிரே "ஹோட்டல் டேஸ்டி" எனும் பெயரில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (நவம்பர் 22) காலை அந்த உணவகத்திலிருந்து உணவு பார்சல் வாங்கிய வாடிக்கையாளர், பொட்டலத்தை பிரித்து பார்க்கையில் அதில் சுண்டெலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், உணவுப் பொட்டலத்தை உணவகத்தின் உரிமையாளரிடம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உரிமையாளர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முற்படுகையில், உணவகத்தில் இருந்தவர்கள் ஒன்றுகூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஹோட்டல் உணவில் எலி : கொதித்தெழுந்த வாடிக்கையாளர் - dead mice found in hotel food
கோவை: தனியார் உணவகத்தின் பார்சல் செய்யப்பட்ட உணவில், எலி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ஹோட்டல் உணவில் எலி : கொதித்தெழுந்த வாடிக்கையாளர் dead rat found in parcel food](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9624969-thumbnail-3x2-rat.jpg)
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவகத்தை முழுமையாக ஆய்வு செய்து, இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் செய்தியாளர்களை மறித்து உணவகத்தின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள உணவகத்தில் இவ்வாறு தூய்மை இல்லாத உணவுகள் வழங்கப்படுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படி:அரசு மருத்துவமனை ஐசியூவில் சுதந்திரமாக உலா வரும் எலி!