தமிழ்நாடு முழுவதும் ரஜினி நடிப்பில் உருவான 'தர்பார்' படம் ஆயிரக்கணக்கான திரையரங்கில் வெளியானது. இந்நிலையில், பொள்ளச்சியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தர்பார் திரைப்படத்தின் முதல் காட்சி காலை ஆறு மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்நது காலை 10 மணி காட்சி ஒளிபரப்பப்பட்டது. படம் ஆரம்பித்த சில நிமிடத்தில் படத்தின் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது.
'தர்பார்' பட ஒளிபரப்பில் தடங்கல்: முற்றுக்கையிட்ட ரசிகர்கள் - தர்பார் சிறப்புகாட்சி
கோயம்புத்தூர்: 'தர்பார்' படம் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பொள்ளாச்சி திரையங்கத்தை முற்றுக்கையிட்டனர்.
இதனால் திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். நீண்ட நேரம் ஆகியும் ஒளிபரப்பு தடங்கலை சரி செய்யாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரை அரங்கின் முன் முற்றுக்கையிட்டு இந்த காட்சிக்காக செலுத்திய பணத்தை திருப்பி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த பொள்ளாச்சி கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் திரையரங்கம் காட்சிக்கான தொகையை திருப்பி தர உறுதியளித்ததால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.