பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் நடன, நாடக நிகழ்ச்சியினை நடத்த அனுமதி அளிக்குமாறு, தனியார் நாடக குழுவினர் இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவே, சிங்காநல்லூர், புலியங்குளம், உக்கடம், காந்தி பார்க் உள்ளிட்ட பத்து பகுதிகளில் நடன, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
கோவையில் கரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி - கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடன, நாடக நிகழ்ச்சி
கோவை: பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் நடன, நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
dance program held in coimbatore for corona awareness
கோவை மாவட்டத்தில் முன்னதாக ஓவியம், கட்டுரை உள்ளிட்டவைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவந்த நிலையில், நடன, நாடக நிகழ்ச்சியில் மக்கள் பலர் ஒன்று திரண்டதால், கரோனா பரவும் அபாயம் அதிகளவு உள்ளதாக மக்கள் பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் உலாவும் டிராகன்- கரோனா விழிப்புணர்வு