தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவிடக் கூடாது - டி. ராஜா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா

கோயம்புத்தூர்: பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவிடக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி

By

Published : Mar 29, 2021, 2:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியை மக்கள் தோல்வியடையச் செய்ய உள்ளார்கள். இந்திய அரசியல் சட்டங்களை பாஜக அரசு தகர்த்துவருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா

பாஜக வெறும் அரசியல் கட்சியல்ல; ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. மதவெறி பாசிச ஆட்சியை நிலைநிறுத்த ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சிக்கிறது. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றவிடக் கூடாது.

அதிமுகவைப் பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் காலூன்றப் பார்க்கிறது. அதிமுக அரசு மாநில உரிமைகள், நலன்களைக் காப்பாற்றுவதில் மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி படத்தைப் பயன்படுத்தி பரப்புரை செய்யாமல் இருப்பது அதிமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அவர்கள் இருவரும் இணைந்து பரப்புரை செய்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்றார்.

இதையும் படிங்க: வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details