தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்! - Coimbatore District News

கோவை: தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் அபராதம் விதித்ததாகக் கூறி வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டர்.

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்
முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்

By

Published : May 29, 2020, 10:22 PM IST

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் ஏராளமானோர் சொந்த தேவைக்காக கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக, தவணை செலுத்த ஆர்.பி.ஐ கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தவணை தொகையை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதுடன், தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் அபராதமும் விதித்தது. இதனால் ஆவேசமடைந்த வாடிக்கையாளர்கள் இன்று பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. குறைந்த அளவு தவணை தொகைக்கு காசோலையில் பணம் இல்லாததால் வங்கியில் தனியாக அபராதமும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் அபராம் விதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டினர். சமீபத்தில் பைனான்ஸ் தொகை பெறாத பழைய வாடிக்கையாளர்களுக்கும் கூட அபராத தொகை விதித்து இருப்பதால் அவர்களும் குழப்பத்தில் பழைய ஆவணங்களுடன் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் குவிந்தனர்.


முற்றுகையில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினருடன் கடும் வாக்குவாதம் செய்ததோடு, அலுவலகத்தின் வாசலிலும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பொது மக்களை அழைத்து சமரசம் பேசிய காவல் துறையினர், நிர்வாகத்தினரை அழைத்து கூட்டம் கூடாமல் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தி அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினர்.

ஆர்.பி.ஐ விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:கோயில் முன் பன்றி இறைச்சி வீசியவர்களுக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details