கோயம்புத்தூர்:கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாகீர். இவரது மகன் இப்ரான் துணி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகன் இப்ரானுக்கு பிடித்த 1 லட்சம் 98 ஆயிரம் மதிப்புள்ள புதிய பைக்கை கோவை அவிநாசி சாலை வ.உ.சி பூங்கா அருகே உள்ள தனியார் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கடந்த செப்டமர் மாதம் வாங்கி கொடுத்துள்ளார்.
பைக் வாங்கி இரண்டரை மாதங்கள் ஆகிய நிலையில் பைக் இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது.பைக் எடுத்து தற்போது வரை வெறும் 1100 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டப்பட்டுள்ளது. இதனை பலமுறை சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாடிக்கையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பைக் எடுத்ததில் இருந்து ஆயில் கசிந்து கொண்டே இருப்பதாக ஆறு முறையும் சர்வீஸ் செய்துள்ளனர். ஒவ்வொரு 200 கிலோமீட்டர் ஓட்டும் போது பைக்கில் இருந்து ஆயில் கசிந்து கொண்டு இருக்கிறது என வாடிக்கையாளர் கூறுகிறார். அதேபோல பைக் எடுக்கும் பொழுது 45 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெறும் 20 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் வருவதாக வாடிக்கையாளர் தெரிவித்தார்.