கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், சந்தை, பெரிய துணிக் கடைகள், நகைக் கடைகள், பொழுதுபோக்குக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை செயல்பட அனுமதி ரத்துசெய்யப்பட்டிருந்தன.
இதனிடையே கோவையில் தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் இதுவரை 80 விழுக்காடு மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. அதேசமயம் அரசு அறிவித்த அனைத்துத் தளர்வுகளுடன்கூடிய கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும்.