தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் மோடி சொன்ன கதை!

By

Published : Jun 17, 2022, 10:35 PM IST

Updated : Jun 18, 2022, 2:39 PM IST

தமிழ்நாடு மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு சொன்ன முதலைக் கதை இடம்பெற்றுள்ளது.

ஒன்றாம் வகுப்பு  பாட புத்தகத்தில் மோடி சொன்ன முதலை கதை!
ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் மோடி சொன்ன முதலை கதை!

கோவை :உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு பியர் கிரில்ஸும் பிரதமர் மோடியும் சாகச காட்டுப் பயணம் மேற்கொண்டனர். இது 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது மோடி சொன்ன விஷயம் அப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

மோடி சிறுவனாக இருந்தபோது உள்ளூரில் இருந்த ஒரு குளத்தில் குளிக்கச் சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு முதலைக் குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார். இது பற்றி மோடி நினைவு கூர்ந்தபோது, ’இது தவறு என்று என் அம்மா உணர்த்தினார்கள். நீ இதை செய்திருக்கக் கூடாது. திரும்ப போய் குளத்தில் விட்டு விட்டு வா என்று அம்மா சொன்னார்கள். அதன்படியே செய்தேன்’ என்று கூறியிருந்தார்.

ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் மோடி சொன்ன முதலை கதை!

இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து மோடி சொன்ன முதலைக் கதை, ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் இக்கதை வந்துள்ளது. அதில் மோடி குறித்த தகவல்கள் மற்றும் மோடி படத்துடன் மோடி சொன்ன கதை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மோடி சொன்ன முதலைக் கதை!

மோடி இளம் வயதில் மிகவும் தைரியமாக இருந்ததாகவும், ஒருமுறை குட்டி முதலையை பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :அக்னிபாத் திட்டம் - விமானப் படையில் வரும் 24ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு!

Last Updated : Jun 18, 2022, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details