தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தகாத வார்த்தைகளில் பேசக்கூட தயங்கமாட்டார்’: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறித்து வெளிவரும் பகீர் தகவல்கள்! - another man affects by sathankulam sp sridar

பத்து வருடங்களுக்கு முன்பே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் பறிபோக வாய்ப்பில்லை என ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட ஜவஹர் தெரிவித்துள்ளார்.

ஜவகர்
ஜவகர்

By

Published : Jul 2, 2020, 2:48 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐஆக இருந்த ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார் மனு

இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றில் ஸ்ரீதர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்துள்ளார். ஜவஹர் என்பவருடைய நிலத்தை, அய்யாக்கண்ணு எனும் தலைமைக் காவலர் ஆக்கிரமித்திருக்கிறார். இதுதொடர்பாக, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஜவஹர் புகாரளித்துள்ளார்.

புகார் மனு

இந்த வழக்கை சரவணன் எனும் காவல் ஆய்வாளர் விசாரித்து வந்த நிலையில், அந்த இடத்துக்கு ஸ்ரீதர் புதிதாக வந்துள்ளார். தலைமைக் காவலர் அய்யாக்கண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஜவஹர் குடும்பத்தின் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஸ்ரீதர் அட்டூழியம் செய்திருக்கிறார்.

இது குறித்து ஜவஹர் கூறுகையில், “ கடந்த 2011ஆம் வருடம் ஆய்வாளர் ஸ்ரீதர் ராஜாங்குளத்தில் வேலை செய்தபோது, அய்யாக்கண்ணு என்கிற தலைமை காவலர் எங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்தார். அது ஆக்கிரமிப்பு என்று தெரிந்தபோது ஸ்ரீதர் அவருக்கு சாதகமாக செயல்பட்டார். அய்யாக்கண்ணை நாங்கள் அடித்ததாக பொய் சாட்சியைக்கூட ஏற்பாடு செய்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை காவல் அலுவர்களை அணுகினோம். ஆனால் ஸ்ரீதர் அவரது காவல் அதிகாரத்தால் அதை தட்டி கழித்தார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறித்து வெளிவரும் பகீர் தகவல்கள்

அப்போதே ஸ்ரீதர் மீது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது சாத்தான்குளத்தில் இது போன்று பெரிய சம்பவம் நடந்திருக்காது. இந்த சம்பவத்தை அரசியல் கட்சி தலைவர்களும், வருங்கால அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

குறிப்பாக, ஸ்ரீதர் அவருக்கு எதிராக யாரேனும் செயல்பட்டால் பாரபட்சமின்றி கொச்சையான வார்த்தைகளால் பேசிவிடுவார். முதலில் அவர்களை அடித்து பின்னர் அவர்களுடைய உடைகளை களைந்து மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வார். காவல் துறை உயர் அலுவலர்கள், நீதிமன்ற உயர் அலுவர்கள் எனது பேச்சைதான் கேட்பார்கள் என அலட்சியமாக பேசுவார்” என்றார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம், “விசாரணை தாமதம், குற்றவாளிகளுக்கு சாதகம்” - பழ. நெடுமாறன்

ABOUT THE AUTHOR

...view details