கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண் இதனைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையர் சுமித் சரண், 'கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு குழுக்களுக்கிடையே தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்து, இஸ்லாமியர்கள் இடையே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இஸ்லாமியர் ஒருவரின் காரை சேதப்படுத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதியின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் விசாரணைகளுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் என்பவரைத் தாக்கிய வழக்கிலும், தாகிர் இக்பால் என்பவரைத் தாக்கிய வழக்கிலும் சிலர் மீது சந்தேகம் உள்ளது. அவர்களை விசாரணைக்குட்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.