தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - சூதாட்டம்

கோவையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் குற்ற வழக்கு பதிவு: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவையில் குற்ற வழக்கு பதிவு: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Nov 5, 2022, 7:48 PM IST

கோயம்புத்தூர்: இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கோவை மாவட்டத்தில் 371 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சம்மந்தப்பட்ட 515 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.73, 54,370/- மதிப்புள்ள 551.787 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 288 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சம்மந்தப்பட்ட 417 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.56,39,320/ மதிப்புள்ள 380.282 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரூ 19,00,000 மதிப்புள்ள உயர்ந்த ரக போதை பொருட்களும் உள்ளடங்கும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அதைத்தொடர்ந்து 951 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சம்மந்தப்பட்ட 1,001 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.1,59,69,515 மதிப்புள்ள 18,042 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்திலிருந்து 670 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 712 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.1,40,07,486/ மதிப்புள்ள 15,092.300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6,571 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 6667 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து 21,138.940 லிட்டர் (61,874 பாட்டில்கள்) மதுபானங்கள் மற்றும் 111 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 3975 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 4013 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 14,325 லிட்டர் (35,968 பாட்டில்கள்) மதுபானங்கள் மற்றும் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 310 குற்றவாளிகள் மீது 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.12,60,400/ மதிப்புள்ள 31,510 எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4,05,015/- ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 241 குற்றவாளிகள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.5,38,360/ மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3,24,450/- ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1378 குற்றவாளிகள் மீது 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.38,95,800/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 894 குற்றவாளிகள் மீது 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.33,26,480/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காதல் மனைவியின் முகத்தை கத்தியால் கிழித்த கணவன்.. கோவை பகீர் சம்பவம்!!

ABOUT THE AUTHOR

...view details