தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை தாதா லொக்கா வீட்டில் சிபிசிஐடி விசாரணை! - CPCIT investigation at the home

கோயம்புத்தூர்: இலங்கை தாதா அங்கொடா லொக்கா மரணம் குறித்து விசாரிக்க ஏழு தனிப்படைகள் அமைத்துள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்தார்.

cbcid
cbcid

By

Published : Aug 4, 2020, 7:33 PM IST

சினிமாவை போன்றே தாதாக்களின் வாழ்க்கை சந்தேகம் நிறைந்ததாகவே இருக்கும் என்பதை அங்கொடா லொக்காவின் மரணம் நிரூபித்துள்ளது. இலங்கை தாதா அங்கொடா லொக்காவை சர்வதேச நாடுகள் தேடி வந்த நிலையில், கோவையில் தனது காதலியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 5ஆம் தேதி இறந்த நிலையில், பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், அங்கொடா மரணம் குறித்த வழக்கை விசாரிக்க 7 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். அதனடிப்படையில், சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி ராஜு தலைமையில் 10 பேர் கொண்ட குழு லொக்காவின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. வீட்டையும் வீட்டில் அருகில் சுற்றுப்புறத்தையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து ஐஜிக்கு தெரிவிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இத்துணுண்டு பார்சல்ல இம்புட்டு தங்கமா? ஸ்வப்னாவுக்கும் தொடர்பா?

ABOUT THE AUTHOR

...view details