தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 511 ஆக கடந்தது.

CORONA
CORONA

By

Published : Oct 12, 2020, 8:24 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக். 12 ) 393 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 466 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நான்காயிரத்து 839 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்திலிருந்து குறைந்த கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details