தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் மேலும் 628 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்!

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 448 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 628 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Covid19 Coimbatore district
Covid19 Coimbatore district

By

Published : Oct 8, 2020, 9:36 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக். 7) 448 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் இன்று மூன்று பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 628 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 4 அயிரத்து 764 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 10 ஆயிரத்தைக் கடந்த கரோனா இறப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details