தமிழ்நாட்டில் இன்று (செப். 17) புதிதாக 5560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
கோவையில் புதிதாக 530 பேருக்கு கரோனா - கோவை மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் புதிதாக 530 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை
இதற்கிடையில் இன்று கோவை மாவட்டத்தில் புதிதாக 530 பேருக்கு தொற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,234ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் இன்று ஒரே நாளில் 364 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை 20,264ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சைப் பலனின்றி 368 பேர் உயிரிழந்தனர்.