தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்காததை கண்டித்து போராட்டம்

கோவை: பொள்ளாச்சி இடையே நடைபெற்று வந்த அகல ரயில்பாதை பணிகள் காரணமாக தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

By

Published : Oct 15, 2019, 3:48 PM IST

Updated : Oct 15, 2019, 3:58 PM IST

கோவை - பொள்ளாச்சி இடையே அகல ரயில்பாதை பணிகள் காரணமாக கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்து அந்த வழிதடத்தில் ரயில் சேவை தொடங்கிய நிலையிலும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்படவில்லை.

அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவை மீண்டும் தொடங்காததை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறுகையில், கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - மதுரை மற்றும் கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் உள்ளிட்ட ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி தொடங்கவில்லை என்றால் இதனை கண்டித்து வருகின்ற 23ஆம் தேதி கோவை ரயில் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க :கோவை விமான நிலையத்தில் ரூ.69 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Last Updated : Oct 15, 2019, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details