கோவை :சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிநேகா மற்றும் விக்னேஷ்வர் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், கடந்த மார்ச் 1ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், இருவரும் பாதுகாப்புக்கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 2) பெண்னின் வீட்டார் தம்பதியிடம் சமாதானம் ஆகிக் கொள்ளலாம் என்று கோயிலுக்குச் செல்வதாகக் கூறி அவர்களை காரில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, தங்களை கொலை செய்ய அழைத்துச் செல்வதாகக்கூறி, கோவை - லட்சுமி மில் சிக்னலில் காதல் தம்பதியினர், காரில் இருந்துவெளியில் குதித்து கதறியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், பொதுமக்கள் இருவரையும் காவல் துறையினர் உதவியுடன் மீட்டனர்.
இந்நிலையில், சினேகா அளித்தப்புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல்துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் என்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : காப்பாத்துங்க...ப்ளீஸ் - சாலையில் கதறி அழுத காதலர்கள்!