கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிஜாய். கோவை டி.கே. வீதியில் தங்கி தங்க நகைத்தொழில் செய்து வருகிறார்.
வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரை பிஜாய் சரிவர மூடாமல் விட்டதாக கூறப்படுகிறது. கேஸ் கசிந்து தீப்பற்றிய நிலையில், வீடு முழுவதும் தீப்பரவி ஓடுகள் விழத்தொடங்கி உள்ளன. சத்தம் கேட்டும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்ததில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பிஜாய் தவித்து உள்ளார்.