கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபவர்களை போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதாக போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த இரண்டு நாள்களாக கோவை வழியாக செல்லும் ரயில்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது இந்தs சோதனையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன், பிரபாகரன், பாலமுருகன் ஆகிய மூன்று பேரிடம் 52 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் 52 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி ரயில்கள் மூலம் கடத்தி வந்து கேரளா, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது