தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஜக்கம்மா வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு - Coimbatore Corona Awareness

கோவை: புலியகுளம் விநாயகர் கோயில் வளாகம் முன்பு ஜக்கம்மா வேடமணிந்து ராமநாதபுரம் காவல் துறையினர் விழிப்புணர்வு நடத்தினர்.

ஜக்கம்மா வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு
ஜக்கம்மா வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு

By

Published : Apr 19, 2020, 8:13 PM IST

கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் காவல் துறையினர் புலியகுளம் விநாயகர் கோயில் வளாகம் முன்பு ஜக்கம்மா வேடமணிந்து விழிப்புணர்வு நடத்தினர்.

ஜக்கம்மா வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு

இதில் அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அனைவரும் இடைவெளி விட்டு நின்று அதை கண்டனர். இந்த விழிப்புணர்வானது மாநகர தெற்கு உதவி ஆணையர் இமானுவேல் தலைமையிலும் ராமநாதபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும், விழிப்புணர்வுக்கு பின்னர் பொதுமக்களுக்கு காவல் துறையினர் முகக் கவசம் வழங்கினர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் உருவ பொம்மையை வைத்து விழிப்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details