கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், தொழில் துறையினர் என பல்வேறு தரப்பினரும் தங்களது பங்களிப்பினை பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் நிதிக்கு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கரோனா தடுப்பு நடவடிக்கைகாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பிலிருந்து ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகனிடம் வழங்கினார்.