தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வெடிப்பு சம்பவம் - முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு! - கோவை காவல் ஆணையர்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தனிப்படையின் விசாரணை ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டதாக, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர்
காவல் ஆணையர்

By

Published : Nov 8, 2022, 6:47 PM IST

கோவையில் போக்குவரத்து விதிமீறல்கள் தடுப்பு, உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள ட்ரோன் கேமராக்களை பயன்படுத்துவது குறித்து காவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தனிப்படை போலீசாரின் விசாரணை ஆவணங்கள் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி

இதையும் படிங்க:EWS 10% இட ஒதுக்கீடு: வரும் நவ.12-ல் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details