கரோனாவால் பொது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக சார்பில் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.
தோட்ட தொழிலாளர்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய அதிமுக - வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர்
கோவை: தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமான சின்கோனா பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிமுக சார்பில் அரசு காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய அதிமுகவினர்
வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு வலியுறுத்தலின் படி, நகர செயலாளர் மயில்கணேசன், தொழிற்சங்க தலைவர் அமீது ஆகியோர் வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கினர். இதனிடையே ஊரடங்கால் வேலைக்குச் செல்லாத ஆறு நாட்களுக்கும் அரசு ஊதியம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல்'