கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 3905 இளங்கலை பட்டப்படிப்பு இடங்களுக்கான 2019-2020ஆம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கை ரேங்க் பட்டியல் கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. 41 ஆயிரத்து 950 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
வேளாண், மீன்வள பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு தொடங்கியது!
தமிழ்நாட்டில் மிக முக்கியமான பல்கலைகழகங்களில் ஒன்றான வேளாண், மீன்வள பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
பழைய மகாபலிபுரம் சாலை சிறுசேரி அடுத்து வாணியம்சாவடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி தொடங்கி 15 ,16 என மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
14ஆம் தேதி இளநிலை மீன்வள அறிவியல் படிப்பிற்கும், 15ஆம் தேதி இளநிலை மீன்வள பொறியியல், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை மீன்வள மாலுமிகளை தொழில்நுட்பவியல் படிப்பிற்கும், 17ஆம் தேதி இளநிலை உயிர் தொழில்நுட்பவியல், இளநிலை உணவு தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாக படிப்பிற்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தனர்.