கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின் பேரில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்கள் பொது இடங்களிலும், வீடு விடாக சென்று தேவையின்றி தேங்கி இருக்கும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். பின்னர் பொதுமக்களிடமும் டெங்கு கொசு வராமல் தடுக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி பணியாளர் சம்பத் என்பவர் டெங்கு கொசு போல் வேடமணிந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். "நான் தான் டெங்கு.. உனக்கு ஊதுவேன் சங்கு" என்ற வசகத்துடன் டெங்கு கொசு அதிகம் உருவாக கூடிய டயர்கள், பயன்படுத்தாமல் நீர் தேங்கும் பிளாஸ்டிக் பாத்திரங்கள், தேங்காய் மூடிகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை மாலையாக அணிந்து கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், டீ கடைகளிலும் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும், மாநகராட்சி பள்ளிகளிலும் டெங்கு கொசு போல் வேடமணிந்து பள்ளி குழந்தைகளிடமும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்