தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகராட்சி பொறியாளர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை! - Election Flying Corps

நள்ளிரவில் மாநகராட்சி பொறியாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை நடத்தினர்.

பொறியாளர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை
பொறியாளர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை

By

Published : Mar 11, 2021, 10:42 AM IST

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் என்பவரது வீட்டில் ரூ.5 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திமுக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுமார் 11 மணியளவில் அவர் வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவலளித்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரம் கழித்து தேர்தல் பறக்கும் படையினர் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் பின்பு சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டதில் எவ்வித பணமும் பதுக்கி வைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் தேர்தல் பறக்கும்படை அலுவலர்களிடம் மோதல்

இதனால் ஆவேசமடைந்த திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் தேர்தல் பறக்கும்படை அலுவலர்களிடம், தாமதமாக வந்ததாலேயே பணத்தை பிடிக்க முடியவில்லை என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பறக்கும் படையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.

இதையும் படிங்க:’கரோனா விதிமுறைகளுடன் வேட்பு மனு தாக்கல் நடைபெறும்’ - ஆட்சியர் செந்தில் ராஜ்

ABOUT THE AUTHOR

...view details