கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக பேரூர் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மக்கள் ஊரடங்கு: ரகசிய மது விற்பனை... டாஸ்மாக் கடைக்கு சீல் - கரோனா வைரஸ் தொற்று
கோவை: சட்ட விரோதமாக மது விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு பேரூர் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

tasmac
டாஸ்மாக்குக்கு சீல் வைத்த வட்டாட்சியர்
இதனையடுத்து பேரூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததது தெரியவந்தது.
இதனையடுத்து அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி ஆலந்துறை, பேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
Last Updated : Mar 22, 2020, 10:47 PM IST