கோவையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் 127 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், மருத்துவர், 10 மாதக் குழந்தை உள்ளிட்ட 14 பேர் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்றிரவு புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 12 பேரை மருத்துவர்கள், செவிலியர் கைதட்டி, பாராட்டி அனுப்பிவைத்தனர். வருங்காலங்களில் 28 நாள் அவர்களைத் தனிமைப்படுத்தி இருக்குமாறும், பொது இடங்களில் அதிகமாகச் செல்லக் கூடாது என்றும் மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.