கொரோனா வைரஸின் பாதிப்பால் தமிழ்நாடு முழுவதும் அரசு தரப்பில், பொது இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள், திரையரங்குகள், மால்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொது இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடம் இடமான கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் இன்று கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்டுகள், கழிவறைகள், மரங்கள், செடிகள், கைபிடிகள், நடைபாதைகள் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.