தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வார்டில் நோயாளிகள் நடனம்! - Coimbatore District News

கோவை : கொடிசியா வளாகத்தில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகள் தங்களது மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடனமாடி மகிழும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கரோனா வார்டில் நடனமாடும் நோயாளிகள்
கரோனா வார்டில் நடனமாடும் நோயாளிகள்

By

Published : Aug 13, 2020, 6:20 PM IST

கோவை மாவட்டத்தில் கரோனா அறிகுறியுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் ’அசிம்டமேடிக்’ எனப்படும் அறிகுறிகளற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டோர் கொடிசியா வளாகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வளாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடும்பத்தினரை பிரிந்து வாடும் இவர்களது மன அழுத்தத்தைப் போகுவதற்காக தினமும் பெரிய திரைகளில் படங்கள் போட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வார்டில் நடனமாடும் நோயாளிகள்

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்கள் ஒன்று கூடி திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி மகிழும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும், அதில் ஒருவர் பல்வேறு நடிகர்களைப் போன்று நடனமாடும் காட்சி, காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் உள்ளது.

இதையும் படிங்க:ஆர்ப்பரித்து கொட்டும் அருவி: கழுகு பார்வையில் ஒகேனக்கல்!

ABOUT THE AUTHOR

...view details