கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி, மருத்துவத் துறையினர் இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில், வெளியூர் சென்று வந்துள்ள நால்வரை பரிசோதித்தது. அதில், ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது. மேலும், மற்ற மூன்று பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமலிருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்தார்.