தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனாவால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய அரசு முன்வர வேண்டும்' - Coimbatore Latest News

கோவை: கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க ஒரு வருடம் வரையில் வங்கி கடனுக்கான கால நீட்டிப்பு, வட்டி சலுகை உள்ளிட்ட உதவிகளை அரசு செய்துதர வேண்டும் என சிறு, குறு தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Corona virus Affects the MSME Industries Around Tamilnadu
Corona virus Affects the MSME Industries Around Tamilnadu

By

Published : Mar 20, 2020, 1:14 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில் சிறு, குறு தொழில் துறையினரும் கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றனர். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வெளிமாநிலங்களிலிருந்து வரவேண்டிய ஆர்டர்கள் வராததால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகக் குறுந்தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குறுந்தொழில்முனைவோருக்கான டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ''ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறுந்தொழில் நெருக்கடி ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது கரோனா பாதிப்பால் சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து உள்ளது.

டேக்ட் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ்

இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் குறுந்தொழில்முனைவோர் வங்கியில் வாங்கியுள்ள வங்கிக் கடனுக்கான வட்டியை ஒரு வருட காலத்திற்குத் தள்ளுபடி செய்ய வேண்டும், வங்கிக் கடன் செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்'' என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவால் முடங்கிய தொழில்: மாற்று இழப்பீடு கோரும் வியாபாரிகள்

ABOUT THE AUTHOR

...view details