தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதால், சிகிச்சைக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரியில் 5 நாட்களுக்குப் பின் தடுப்பூசி போடப்படுவதால் கல்லூரி முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் இன்று(மே.10) காலை முதலே தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் அதே சமயம் கோவை கொடிசியா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாள்களாக ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் நிலையில் மூன்றாவது நாளான இன்றும் மருந்து விற்பனையாகிவருகிறது. இதனை வாங்கவும் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.
ரெம்டெசிவர் மருந்து மற்றும் தடுப்பூசிகள் குறைந்தளவே இருப்பு இருந்தாலும் மக்களின் கூட்டம் அதிகளவே காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரும் தொடர்ந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா வந்தா என்ன? பதற வேண்டாம் - கூப்பிடுங்க '104'