கோவையில் இன்று 271 நபர்களுக்கு கரோனா பாதிப்பு - கோவை கரோனா நிலவரம்
கோவையில் இன்று 271 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News
கோவையில் இன்று 271 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 41,830ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,600ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 535 ஆக அதிகரித்துள்ளது.