கோவையில் நேற்று (நவ.01) 248 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 43,504ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் புதிதாக 248 பேருக்கு கரோனா - Corona update at Coimbatore
கோவை : நேற்று (நவ.01) 573 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், 248 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
corona
முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 573 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41,219ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கரோனா உயிரிழப்புகள் மாவட்டத்தில் இல்லாத நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557ஆக உள்ளது.