கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், கோவையில் இன்று (ஆக. 24) 387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 141ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஏழு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில், 338 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் இதுவரை கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளது.