தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை! - கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 19 பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறைக்கும் கரோனா பெருந்தொற்று உள்ளதா என பரிசோதனை நடைபெற்றது.

பரிசோதனை
பொள்ளாச்சியில் காவல்துறையினருக்கு ரோபிட் டெஸ்ட் பரிசோதனை!

By

Published : Apr 21, 2020, 10:53 PM IST

Updated : May 19, 2020, 5:55 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 19 பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாச்சிமுத்து பிரசவ விடுதியில் துணை காவல் ஆணையர், காவல் துறை ஆய்வாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், துணை சபாநாயகர் ஜெயராமன், அவரது ஆதரவாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆகியோருக்கு பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில், கரோனா பெருந்தொற்று உள்ளதா என ரேபிட் டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை செய்த அனைவருக்கும் கரோனா பெருந்தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் எஸ்கார்ட் வாகனத்தில் இருக்கும் எஸ்ஐ ஒருவருக்கு அறிகுறி இருந்ததாகப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது!

Last Updated : May 19, 2020, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details