தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்நாட்டு விமான பயணிகளுக்கான கரோனா பரிசோதனை நிறுத்தம் - உள்நாட்டு விமான பயணிகள்

கோயம்புத்தூர்: விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமான நிலையம்

By

Published : Jul 10, 2020, 4:24 PM IST

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை விமான நிலையத்தில் செய்யப்படுகிறது. அதேசமயம் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விமானத்தில் வரும் பயணிகளின் விவரங்களை சேகரிக்கும் சுகாதாரத் துறை அலுவலர்கள் பயணிகளின் கையில் தனிமைpபடுத்துவதற்கான சீல் வைக்கின்றன. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் தனிமைப்படுத்தி இருக்கும்போது அறிகுறிகள் இருந்தால் கரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

தினமும் 500க்கும் மேற்பட்டோர் டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிliருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வருகின்றனர். தற்போது பரிசோதனை நிறுத்தப்பட்டிருப்பதால் விமானம் பயணிகளின் மூலம் மேலும் கரோனா பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details