தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்! - Coimbatore District News

கோவை: வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்யக்கோரி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம்
மாநகராட்சி நிர்வாகம்

By

Published : Aug 26, 2020, 2:17 PM IST

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 12 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 244 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை திகழ்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில் கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே, மாநகராட்சி நிர்வாகமானது, 15 நாட்களுக்கு ஒருமுறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை

அப்படி முடியாவிட்டால் pool test - என்று அழைக்கக்கூடிய நூறில் 10 பேர் என்ற வீதத்திலாவது, அந்தப் பரிசோதனை மேற்கொண்டு, அரசு விதித்த அறிவுரைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், ஆரம்பத்திலேயே கரோனா தொற்றைக் கட்டுபடுத்த இந்த வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அமைச்சரின் கூட்டத்தில் அரசு விதிகள் மீறல்: மக்கள் முகம் சுளிப்பு

ABOUT THE AUTHOR

...view details