தமிழ்நாடு

tamil nadu

யானைகளுக்கு கரோனா பரிசோதனை - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு!

By

Published : Jun 9, 2021, 8:54 AM IST

Updated : Jun 9, 2021, 10:43 AM IST

கோயம்புத்தூர்: டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

யானைகளுக்கு கரோனா பரிசோதனை
யானைகளுக்கு கரோனா பரிசோதனை

பொள்ளாச்சி ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக நீலா என்ற பெண் சிங்கம் இறந்ததை அடுத்து, வனவிலங்குகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று(ஜுன்.8) டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமிலுள்ள 28 யானைகளுக்கு கால்நடை அலுவலர் மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

யானைகளுக்கு கரோனா பரிசோதனை

யானையின் தும்பிக்கையிலிருந்து உமிழ் நீர் மற்றும் ஆசனவாயிலிருந்து எச்சம் எடுக்கப்பட்ட மாதிரிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வன உயிரின மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுகள் வந்த பின்னர், தொற்று இருக்கும் சூழ்நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. சண்முகசுந்தரம், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர்கள் சேனாதிபதி, கன்னிமுத்து, யுவராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'தமிழ்நாடு முழுவதும் ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்!

Last Updated : Jun 9, 2021, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details