தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாநில நெசவாளர் அணி சார்பில் மாநிலச் செயலாளா் கே.எம். நாகராஜன் ஏற்பாட்டில், கோவையின் தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் மக்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்! - Corona virus
கோவை: பொள்ளாச்சியில் மாநில நெசவாளர் அணி சார்பில் 5000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள், சத்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு கரோனா தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், சானிட்டரி, கபசுரப் பொடி, நோய் எதிர்ப்பு மாத்திரைகள், சத்து மாத்திரைகள் ஆகியவை அடங்கிய பெட்டகத்தை எம்.பி. சண்முகசுந்தரம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, வடக்கு மத்திய பொறுப்பாளர் அய்யம்பாளையம் ராசு, நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜகோபால், விஜயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில், ரகுபதி, நகரக் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.