தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு ஆலோசனைக்கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் அமைச்சர்கள் தலைமையில் நடந்த கரோனா ஆலோசனைக் கூட்டம்! - கரோனா விவரங்கள்
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை மூலமாக வீடு வீடாக சென்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், நகராட்சி அலுவலர்கள், வனத் துறையினர் பங்கேற்றனர்.
இதற்கு முன்னதாக பொள்ளாச்சி ரோட்டரி கிளப், ராயல் ரோட்டரி இணைத்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, வால்பாறை அரசு மருத்துவனைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.