கோயம்புத்தூர்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்க்கு இன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து. அவர் அவரது முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற இருந்த நிகழ்வுகள் பயிற்சி ஆட்சியர் தலைமையிலோ அல்லது வருவாய் அலுவலர் முன்னிலையிலோ நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் ( ஜனவரி 26 ) குடியரசு தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். நேற்று ( ஜனவரி 27 ) அவரது நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.